search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    வீடியோ: தேசியக் கொடிக்கு 21 முறை சல்யூட் அடித்து பாரத் மாதா கி ஜே  சொன்ன இளைஞர் - ஏன் தெரியுமா?
    X

    வீடியோ: தேசியக் கொடிக்கு 21 முறை சல்யூட் அடித்து 'பாரத் மாதா கி ஜே' சொன்ன இளைஞர் - ஏன் தெரியுமா?

    • ஜாமீன் கேட்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
    • ஜாமீன் வழங்க நீதிமன்றம் நிபந்தனை விதித்தது

    மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பைசல் என்ற இளைஞர் இரு குழுக்களுக்கு இடையே மோதலை தூண்டும் வகையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார் என்பதற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.

    புகாரின் பேரில் கடந்த மே மாதம் மிஸ்ராட் பகுதி போலீசால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வழக்கில் ஜாமீன் கேட்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் பைசல் மனு தாக்கல் செய்தார்.

    இதுதொடர்பான விசாரணையில், ஜாமீன் வழங்க வேண்டும்என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் கட்டி மிஸ்ராட் காவல் நிலையத்தில் உள்ள தேசிய கொடியின் முன் 21 முறை வணக்கம் செலுத்தி, 2 முறை பாரத் மாதா கி ஜே என உச்சரிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் அந்த உத்தரவின்படி பைசல் தேசிய கோடிக்கு 21 முறை சல்யூட் வைத்து பாரத் மாதா கி ஜே சொல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×