search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    இந்தியா ஜெர்சி அணிந்து அரியானா சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற வினேஷ் போகத் - வீடியோ
    X

    இந்தியா ஜெர்சி அணிந்து அரியானா சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற வினேஷ் போகத் - வீடியோ

    • ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிட்டார்
    • 19 ஆண்டுகளாக ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.

    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.

    இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். பாரீசில் இருந்து திரும்பிய சில தினங்களில் அவர் அரசியலில் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    அரியானா சட்டசபைத் தேர்தலில் அவருக்குக் காங்கிரஸ் கட்சி சீட்டு கொடுத்தது. ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை விட 6015 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் 19 ஆண்டுகளாக ஜூலானா தொகுதியில் தோல்வியைப் பார்த்து வந்த காங்கிரஸ் கட்சிக்கு வினேஷ் போகத் வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இந்நிலையில் அரியானா சட்டசபையில் இந்தியா ஜெர்சி அணிந்து வினேஷ் போகத் ஜூலானா தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார்.

    Next Story
    ×