search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வன்முறை எதிரொலி - மேற்கு வங்கத்தில் மறு வாக்குப்பதிவு துவங்கியது
    X

    வன்முறை எதிரொலி - மேற்கு வங்கத்தில் மறு வாக்குப்பதிவு துவங்கியது

    • நேற்று முன் தினம் (ஜூன் 1) நடந்த கடைசி கட்ட தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது.

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை (ஜூன் 4) வாக்குகள் எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 1 நாளே உள்ள நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி மேற்கு வங்கத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பராசத் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியிலும், மதுராபூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி பலத்த பாதுகாப்புடன் இன்று (ஜூன் 3) காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    நேற்று முன் தினம் (ஜூன் 1) நடந்த கடைசி கட்ட தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. இதைத்தொடர்ந்து பாஜக மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்த நிலையில் இந்த மறு வாக்குப்பதிவானது இன்று நடத்தப்படுகிறது.

    Next Story
    ×