search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வக்பு வாரியம் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி.. கொந்தளித்த திருப்பதி அறங்காவலர்.. ஓவைசி மீது பாய்ச்சல்
    X

    வக்பு வாரியம் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி.. கொந்தளித்த திருப்பதி அறங்காவலர்.. ஓவைசி மீது பாய்ச்சல்

    • திருப்தியில் பணிபுரியும் அனைவரும் இந்துவாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்
    • வக்பு வாரிய கமிட்டியில் முஸ்லிம் அல்லாத 2 உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் சட்டத்திருத்த மசோதா கூறுகிறது.

    இஸ்லாமியர்களின் சமூகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்காக இயங்கி வரும் வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் புதிய மசோதாவை மத்திய பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. சொந்தமான நிலங்கள் மீது வக்பு வாரியம் உரிமை கோருவது உள்ளிட்ட அதிகாரங்கள் இந்த மசோதா மூலம் குறைக்கப்பட உள்ளது.

    இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. எனவே இந்த மசோதாவை ஆராய பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 பேர் அடங்கிய பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. பல கூட்டங்கள் நடந்தும் இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை.

    இதற்கிடையே திருப்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு, வக்பு வாரியம் குறித்த கருத்து ஒன்றை தெரிவித்துளார். லட்டு பிரசாம் தயாரிக்க மாட்டிறைச்சி கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஒரு சர்ச்சை எழுந்து அடங்கிய நிலையில் திருப்பதி கோவில் தேவஸ்தானத்தை நிர்வகிக்க 24 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அறங்காவலர் குழுவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நியமித்தார். இதன் தலைவராக பி.ஆர். நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார்.

    பதவியேற்ற உடனேயேதிருப்தியில் பணிபுரியும் அனைவரும் இந்துவாக இருக்க வேண்டும் என்ற தடாலடி கருத்தை அவர் வெளியிட்டார். இதற்கிடையே புதிய வக்பு சட்டத்திருத்த மசோதாவில் வக்பு வாரிய கமிட்டியில் முஸ்லிம் அல்லாத 2 உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததையும் தேவஸ்தான தலைவரின் கருத்தையும் ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி ஒப்பிட்டு பேசியிருந்தார்.

    அதாவது, திருப்பதி தேவஸ்தானத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்க முடியாது என்று சூழலை உருவாக்குகிறீர்கள், அப்படி இருக்கும்போது வக்பு வாரியத்தில் மட்டும் ஏன் முஸ்லிம் அல்லாதோர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறீர்கள் என்று ஒவைசி கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது பேசியுள்ள திருப்பதி அறங்காவலர் பி.ஆர். நாயுடு, இந்த கூற்று அடிப்படையற்றது. வக்பு வாரியம் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி, அதை திருப்பதியோடு எப்படி ஒப்பிட முடியும். திருப்பதி திருமலை ஒரு இந்து கோவில், இந்து அல்லாதோர் இங்கு இருக்கக்கூடாது என்பது பல கால கோரிக்கை. இது எனது தனிப்பட்ட கருத்து அல்ல, இந்துக்களை தவிர அங்கு யாரும் இருக்கக்கூடாது என்று சனாதன தர்மம் கூறுகிறது. இதை நடைமுறைப்படுத்துவது குறித்து போர்டு மீடிங்கிங்கில் முடிவெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×