search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எங்களுக்கு சோரோஸ் விவகாரம் அல்லது அதானி விவகாரம் அல்ல... அவை நடக்கனும்... டிம்பிள் யாதவ்
    X

    எங்களுக்கு சோரோஸ் விவகாரம் அல்லது அதானி விவகாரம் அல்ல... அவை நடக்கனும்... டிம்பிள் யாதவ்

    • அரசியல் சாசனம் மீதான விவாதம் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.
    • அவை நடைபெற வேண்டும் என சமாஜ்வாடி கட்சி விரும்புகிறது.

    இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. பாராளுமன்றம் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அவை நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

    இதனால் அவை நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறவில்லை. அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சோரோஸ்- சோனியா காந்தி விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக விவாதம் நடத்த பா.ஜ.க. கோரிக்கை வைக்கிறது.

    இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மாநிலங்களவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதனால் பாராளுமன்ற நடவடிக்கை ஒருநாள் முழுவதும் தங்குதடையின்றி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே வெள்ளி மற்றும் சனிக்கிழமை அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது.

    தினந்தோறும் அவை ஒத்திவைக்கப்படுவதால் சமாஜ்வாடி எம்.பி. டிம்பிள் யாதவ் விரக்தியடைந்துள்ளார். அதானி விவகாரம் தொடர்பாக முதலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் தற்போது நாங்கள் இரு பிரச்சனையுடன் அல்ல. அவை சமூகமாக நடைபெற வேண்டும் என டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான டிம்பிள் யாதவ் கூறுகையில் "அவை நடந்து கொண்டிருக்கிறது. இன்று அவை நடைபெற்றது. இது தொடர்ந்து நடைபெறும் என நம்புகிறோம். எங்களுக்கு சோரோஸ் விவகாரமும் அல்ல. அதானி விவகாரமும் அல்ல. அவை நடைபெற வேண்டும். அவைகள் நடைபெற இரண்டு தரப்பில் இருந்தும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறோம். அரசியல் சாசனம் மீதான விவாதம் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. அவை நடைபெற வேண்டும் என சமாஜ்வாடி கட்சி விரும்புகிறது.

    இவ்வாறு தெரிவித்தார்.

    Next Story
    ×