search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல் காந்தி- சிவராஜ் சிங் சவுகான்
    X

    நாம் நினைப்பது கிருஷ்ணரை, அவர்கள் சகுனியை...ராகுலுக்கு பதிலடி கொடுத்த சவுகான்

    • தாமரை வடிவிலான சக்கரவியூகத்தில் நாட்டு மக்கள் சிக்கியுள்ளனர்.
    • மோடி, அமித் ஷா, அம்பானி, அதானி உள்ளிட்ட ஆறு பேரால் சக்கரவியூகம் கட்டுப்படுத்தப்படுகிறது.

    ராகுல் காந்தி மக்களவையில் பேசும்போது மகாபாரதத்தில் வரும் சக்கரவியூகம் குறித்து பேசினார். தற்போது தாமரை வடிவிலான சக்கரவியூகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு பேர் இதை கட்டுப்படுத்துவதாகவும், அபிமன்யூ சக்கரவியூகத்தில் சிக்கியதைப் போல் மக்கள் தாமரை வடிவிலான சக்கரவியூகத்தில் சிக்கியுள்ளனர் என்றார்.

    இந்த நிலையில் இன்று மத்திய மந்திரியான சிவராஜ் சிங் சவுகான், நாம் கிருஷ்ணரை நினைவு கூர்கிறோம். அவர்கள் சகுனியை நினைவு கூர்கிறார்கள் என ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    "ராகுல் காந்தி மகாபாரதத்தைப் பற்றி குறிப்பிடும்போது அவர் சகுனி, சக்கரவியூகம், பகடை (தாயம் விளையாட்டு) ஆகியவற்றை நினைவு கூர்கிறார். இந்த வார்த்ததைகள் எல்லாம் அதர்மத்துடன் தொடர்புடையது.

    சகுனி வஞ்சகம், துரோகம் மற்றும் மோசடி ஆகியவற்றின் அடையாளமாக இருந்தார். இதையெல்லாம் காங்கிரஸ் ஏன் எப்போதும் நினைக்கிறது?. பாஜக மகாபாரதம் குறித்து பேசும்போதெல்லாம் கடவுள் கிருஷ்ணரை நினைவு கூர்கிறார்கள். அவர்கள் சகுனியை..." என சிவராஜ் சிங் சவுகான் ராகுல் காந்தியை விமர்சித்தார்.

    Next Story
    ×