என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
புத்தம்புது வந்தே பாரத் ரெயிலை யார் ஓட்டுவது?.. சட்டையை கிழித்து சண்டையிட்ட ஓட்டுனர்கள்- வீடியோ
- புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை யார் ஓட்டுவது என்று லோகோ பைலட்டுகளிடையே மோதல் ஏற்பட்டது
- இந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை யார் ஓட்டுவது என்று லோகோ பைலட்டுகளிடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறி சண்டையில் முடிந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூருக்கு செல்லும் புதிய வந்தே பாரத் ரெயில் இந்த வார ஆரம்பத்தில் செப்டம்பர் 2[திங்கள் கிழமை] தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த ரெயிலை மேற்கு மத்திய ரெயில்வே, வட மேற்கு ரெயில்வே மற்றும் வடக்கு ரயில்வே ஆகிய மூன்று டிவிஷன் லோகோ பைலட்களும் ரெயிலை இயக்க உத்தரவு வந்த நிலையில் தினமும் யார் ரெயிலை இயக்குவது என்பதில் இந்த மூன்று டிவிஷன் ரெயில் லோகோ பைலட்கள் இடையே தினமும் வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று ஆக்ரா மற்றும் கோட்டா ரெயில்வே டிவிஷன் லோகோ லோகோ பைலட்கள் மற்றும் ஊழியர்கள் இடையே கடுமையான சண்டை மூண்டுள்ளது.
ये मारामारी ट्रेन में बैठने के लिए पैसेंजर की नहीं है। ये लोको पायलट हैं, जो वंदेभारत एक्सप्रेस ट्रेन चलाने के लिए आपस में युद्ध कर रहे हैं।आगरा से उदयपुर के बीच ट्रेन अभी शुरू हुई है। पश्चिम–मध्य रेलवे, उत्तर–पश्चिम, उत्तर रेलवे ने अपने अपने स्टाफ को ट्रेन चलाने का आदेश दे रखा… pic.twitter.com/oAgYdxNHa7
— Sachin Gupta (@SachinGuptaUP) September 7, 2024
இதில் ஒரு லோகோ பைலட் மற்றும் அவரது உதவியாளர் தாக்கப்பட்டு அவர்களது சட்டைகள் கிழிக்கப்பட்டது. மேலும் கார்டு ரூமின் போட்டு உடைக்கப்பட்டு கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இந்த கோஷ்டி மோதல் பிரச்சனைக்கு இன்னும் ரெயில்வே தீர்வு காணவில்லை என்று தெரிகிறது.