என் மலர்
இந்தியா
விமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?
- விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
- விமான நிறுவனங்கள் பொருளாதாரம் காரணமாகவும் வெள்ளை நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.
உலகில் உள்ள விமானங்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் உள்ளன. அவ்வாறு விமானங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
வெள்ளை நிறமானது சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது. இந்த நிறம் வெப்பத்தை உறிஞ்சாது. வெப்பம் அதிகமான நாட்களில் விமானத்தின் உட்புறத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
இது ஏ.சி. பயன்பாட்டை குறைத்து எரிபொருள் சேமிப்புக்கும் வழிவகுக்கிறது. மேலும் விமானத்தில் ஏற்படும் விரிசல், அரிப்பு போன்றவற்றை எளிதாக கண்டறிந்து சரிசெய்ய உதவுகிறது.
வெள்ளை நிறம் சீக்கிரத்தில் மங்காது என்பதால் பெயிண்டிங் செலவை குறைக்கிறது. மற்ற வண்ணங்களை விட வெள்ளை நிறமானது அடர்த்தி குறைவானது. இதனால் எரிபொருள் செலவு குறையும். மேலும் வெள்ளை நிறமானது விமானத்தில் பறவைகள் மோதுவதையும் தவிர்க்கிறது.
மற்ற நிறங்கள் என்றால் சூரியனுக்கு அருகில் வானத்தில் விமானங்கள் பறப்பதால் விரைவாக நிறம் மங்கிவிடும் வாய்ப்பு உள்ளது, அதனால் விமானத்திற்கு மீண்டும் மீண்டும் வர்ணம் பூசப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
அதேபோல வெள்ளை நிறத்தை விட வேறு நிறம் பயன்படுத்துவதால் விமானத்தின் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதாவது பெயிண்ட் காரணமாக ஒரு விமானத்தின் எடையானது 273 முதல் 544 கிலோ கிராம் வரை அதிகரிக்குமாம். அந்த 544 கி.கி என்பது 8 பயணிகளுக்கு சமமானது.
விமானம் அதிக எடையுள்ள இருந்தால் அதிக எரிபொருள் தேவைப்படும். இதனால் விமான நிறுவனங்கள் பொருளாதாரம் காரணமாகவும் வெள்ளை நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.