search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கணவனை இழந்த மகள், மறைந்த தந்தையின் வேலைக்கு உரிமை கோரலாம் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
    X

    கணவனை இழந்த மகள், மறைந்த தந்தையின் வேலைக்கு உரிமை கோரலாம் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு

    • நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
    • விதவையான பிறகு தனது தந்தை மற்றும் தனது மைனர் மகனுடன் வாழ்ந்து வந்ததார்

    கணவனை இழந்து விதவையான பெண்கள் தங்களின் தந்தை மறைவுக்குப் பின்னர் அவரது வேலைக்கு உரிமை கோரலாம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    'பிஎஸ்என்எல் டெலிகாம் அலுவலகத்தில் பொது மேலாளராக வேலை பார்த்த தனது தந்தை உயிரிழந்ததால் அவரது வேலையைப் பெற மகளான எனக்கு தகுதி இல்லை என கூறுகின்றனர், நான் விதவை என்பதால் அந்த வேலையைக் கருணை அடிப்படையில் எனக்கு வழங்க ஆவன செய்யவேண்டும் என்று பெண் ஒருவர் அளித்த மனு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜன் ராய் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய லக்னோ அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    விதவையான பிறகு தனது தந்தை மற்றும் தனது மைனர் மகனுடன் தான் வாழ்ந்து வந்ததாகவும், அந்தப் பதவியில் தன்னை நியமிப்பதன் மூலம் தனது குடும்ப உறுப்பினர்களை தன்னால் இயன்றவரைக் கவனித்துக் கொள்ள முடியும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

    இதைப் பரிசீலித்த நீதிபதிகள், ஒரு பெண் திருமணமான ஆன பிறகும், விதவையான பிறகும் கூட மகள் என்ற தகுதியில் அடங்குவார். குறிப்பாகத் தந்தை இறப்பதற்கு முன்பே விதவையான மகள் சட்டப்படி தனது தந்தையின் பலன்களை ஏற்க அனைத்து தகுதியும் உடையவர் என்று தெரிவித்து அவருக்கு தந்தையின் பதவியைக் கருணை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

    Next Story
    ×