என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி- மந்திரி சிவன்குட்டி தகவல் கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி- மந்திரி சிவன்குட்டி தகவல்](https://media.maalaimalar.com/h-upload/2022/07/31/1738798-sivankutty.jpg)
X
மந்திரி சிவன்குட்டி
கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி- மந்திரி சிவன்குட்டி தகவல்
By
Suresh K Jangir31 July 2022 1:51 PM IST (Updated: 31 July 2022 1:51 PM IST)
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- புதிய பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி சேர்க்கப்படும்.
- பள்ளிகளில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் கொள்கையை மாநில அரசு எடுத்துள்ளது.
திருவனந்தபுரம்:
புதிய பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க வேண்டும் என கேரளாவில் சில அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து கேரள கல்வி மந்திரி சிவன்குட்டி கூறுகையில், பள்ளி பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை மறுசீரமைக்க குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும்.
புதிய பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி சேர்க்கப்படும். பாடத்திட்டத்தில் தலைப்பைச் சேர்ப்பது மிகவும் முக்கியம். தற்போது, பாலியல் கல்வியை பாடத்திட்டத்தில் சேர்க்காததால், பல பிரச்னைகள் காணப்படுகின்றன.
பள்ளிகளில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் கொள்கையை மாநில அரசு எடுத்துள்ளது. ஆனால் அதை வலுக்கட்டாயமாக செயல்படுத்த முடியாது. இந்த இயக்கத்தில் மற்ற பிறரின் முடிவு மிகவும் முக்கியமானது என்றார்.
Next Story
×
X