என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி-யை மேற்கு வங்காளத்தில் நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டேன்- மம்தா பேனர்ஜி
- என் பெற்றோரின் பிறந்தநாள் கூட எனக்கு தெரியாது. அப்படியிருக்க என் பெற்றோரின் சான்றிதழ்களை அவர்கள் கேட்டால் என்னால் எப்படி அவற்றை கொடுக்க முடியும்.
- குடியுரிமை திருத்த சட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் நீங்கள் வெளிநாட்டினராக மாறி விடுகிறீர்கள்.
மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அக்கூட்டத்தில் பேசிய அவர், "தேசிய குடிமக்கள் பதிவேட்டை நான் அனுமதிக்க மாட்டேன். அசாமில் 19 லட்சம் இந்து வங்காளிகளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
என் பெற்றோரின் பிறந்தநாள் கூட எனக்கு தெரியாது. அப்படியிருக்க என் பெற்றோரின் சான்றிதழ்களை அவர்கள் கேட்டால் என்னால் எப்படி அவற்றை கொடுக்க முடியும்.
குடியுரிமை திருத்த சட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் நீங்கள் வெளிநாட்டினராக மாறி விடுகிறீர்கள்.
50 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றிதழை அவர்கள் கொண்டு வர சொன்னால், முதலில் பாஜக வேட்பாளர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தில் சான்றிதழ்கள் கொடுத்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்க சொல்லுங்கள்.
பாஜகவினரே குடியுரிமை திருத்த சட்டத்தில் விண்ணப்பிக்கவில்லை என்றால் நாம் ஏன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டையும் நான் அனுமதிக்க மாட்டேன்" என்று மம்தா தெரிவித்தார்.