search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மோகன் பகவத் கருத்தை தொடர்ந்து பிரதமர் மோடி மணிப்பூர் செல்வாரா?- உத்தவ் தாக்கரே கேள்வி
    X

    மோகன் பகவத் கருத்தை தொடர்ந்து பிரதமர் மோடி மணிப்பூர் செல்வாரா?- உத்தவ் தாக்கரே கேள்வி

    • மணிப்பூர் கலவரம் தொடங்கி ஒரு வருடம் முடிந்த நிலையில் கூட அங்கு அமைதி திரும்பாதது கவலை அளிக்கிறது.
    • பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநில நிலைமையை முன்னுரிமையுடன் பரிசீலிக்க வேண்டும்- மோகன் பகவத்.

    மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பிரிவினருக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து வெளியேறி அண்டை மாநிலங்களில் வசித்து வருகிறார்கள்.

    இந்த வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. கலவரம் நடைபெற்று சுமார் ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிறது ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

    இந்த நிலையில்தான் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பவகத் "மணிப்பூர் கலவரம் தொடங்கி ஒரு வருடம் முடிந்த நிலையில் கூட அங்கு அமைதி திரும்பாதது கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநில நிலைமையை முன்னுரிமையுடன் பரிசீலிக்க வேண்டும்." என்றார்.

    இந்த நிலையிலா் சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே இனிமேலாவது பிரதமர் மோடி மணிப்பூர் செல்வாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    மணிப்பூர் எரிந்து கொண்டிருப்பதாக மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்குப் பிறகாவது இதை அவர் சொல்லியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா அங்கு செல்லமாட்டார்களா?

    உயிர்கள் இழந்து கொண்டிருக்கின்றன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு யார் காரணம்? நான் இந்தியாவின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியின் எதிர்கலம் பற்றியல்ல.

    ஜம்மு-காஷ்மீர் மற்றும் மணிப்பூர் நிலையை மோடியால் கையாள முடியவில்லை என்றால், பின்னர் 3-வது முறையாக பிரதமராக இருக்க அவருக்கு உரிமை இல்லை.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநில யாத்ரீகர்கள் ஞாயிறு மாலை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்தனர்.

    கத்துவா மற்றும் டோடா மாவட்டங்களில் பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் சிஆர்பிஎஃப் வீரர் கொல்லப்பட்டார். மேலும் 6 பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×