search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆட்சிக்கு வந்த பிறகு தாராவி மறுமேம்பாடு திட்ட டெண்டர் ரத்து செய்யப்படும்: உத்தவ் தாக்கரே
    X

    ஆட்சிக்கு வந்த பிறகு தாராவி மறுமேம்பாடு திட்ட டெண்டர் ரத்து செய்யப்படும்: உத்தவ் தாக்கரே

    • மும்பையில் குடிசைகள் அதிகமாக அமைந்துள்ள பகுதியாக தாராவி உள்ளது.
    • சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாயில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அதானி குழுமத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் தாராவி ஏராளமான குடிசைகள் அமைந்த பகுதியாகும். இந்த குடிசை பகுதிகளை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்தது. இதற்கு தாராவி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் மகாராஷ்டிரா அரசு தாராவி குடிசை மறுமேம்பாடு திட்டத்திற்கான டெண்டரை அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ளது. பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டம் தற்போது அதானி குழுமத்திற்கு சென்றுள்ளது.

    இந்த நிலையில் சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தாராவி குடியிருப்புவாசிகள் மற்றும் வணிகங்கள் முற்றிலும் அப்புறப்படுத்தப்படாது. அங்குள்ள மக்களுக்கு 500 சதுர அடியில் வீடுகள் கட்டித்தரப்படும்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தாராவி குடிசை மறுமேம்பாடு திட்டத்திற்கான டெண்டரை ரத்து செய்வோம். அதை ஏன் இப்போது ரத்து செய்யக்கூடாது என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். மும்பையை அதானி நகரமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்.

    இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத சலுகைகள் அதானி குழுமத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் சலுகைகளை வழங்க மாட்டோம். தாராவியில் வசிப்பவர்களுக்கு எது நல்லது என்பதை நாங்கள் பார்ப்போம், தேவைப்பட்டால் புதிதாக டெண்டர் விடுவோம்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.

    தாராவி பகுதியை மறுமேம்பாடு செய்வதற்கு ரூ. 5069 கோடி மதிப்பிலான திட்டத்தை அதானி குழும நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மும்பையின் முக்கியமான பகுதியில் 600 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்த இருக்கிறது.

    இந்த திட்டம் முதலில் வேறோடு நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது. பின்னர் அதானி குழுமத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×