என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க முடியாது.. போராட்டம் தொடரும்.. கொல்கத்தா மருத்துவர்கள்
- போராட்டங்களை கைவிட்டு பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருந்தது.
- போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவது என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்ற குற்றவாளியிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்கவும் மருத்துவர்களின் பணிச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டி அம்மாநிலத்தில் இன்னும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இன்று மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்து இருந்தது. இந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேறாத சூழலில் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவது என மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மேலும், "எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணி நிறுத்தம் தொடரும். பெண் டாக்டருக்கு நீதி வழங்கப்பட வேண்டும்," என்று வலியுறுத்தினர்.
இது குறித்து போராட்டக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறும்போது, "கொல்கத்தா காவல் ஆணையாளர், சுகாதார செயலாளர், சுகாதார சேவைகளுக்கான இயக்குநர் மற்றும் மருத்துவ கல்வி இயக்குநர் ஆகியோரை இன்று மாலை 5 மணிக்குள் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அரசிடம் கேட்டு கொண்டோம். ஆனால் எங்களுடைய கோரிக்கைகள் பூர்த்தியாகவில்லை."
"இதோடு நாங்கள் பணிநீக்கம் செய்யக் கோரிய மாநில சுகாதாரத் துறை செயலாளரிடம் இருந்து எங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்த மின்னஞ்சலில் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இது எங்களை அவமதிக்கும் செயலாக உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அதிகபட்சம் பத்து பேர் மட்டுமே வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது ஏற்க தக்கதல்ல. இதனால், எங்களுடைய பணி நிறுத்தம் தொடரும்," என்று தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்