என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
7 வயது மகளை பலாத்காரம் செய்ய காதலனுக்கு உடந்தையாக இருந்த பெண்ணுக்கு 40 ஆண்டு சிறை
- வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார்.
- வழக்கு திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு 11 மற்றும் 7 வயதில் 2 மகள்கள் உள்ளனர். அவரது கணவருக்கு திடீரென மனநிலை பாதிக்கப்பட்டது.
இதனால் அந்த பெண், தனது கணவரை பிரிந்துசென்றார். அவர் தனது காதலன் சிசுபாலன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். அந்த பெண், 7 வயதான தனது இளைய மகளை மட்டும் தன்னுடன் வைத்திருந்தார். அப்போது அந்த பெண்ணின் காதலன், பெண்ணின் இளைய மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி, அதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியிருக்கிறார். இந்நிலையில் அந்த பெண்ணின் மூத்த மகள் தாய் மற்றும் சகோதரி தங்கியிருந்த வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
அப்போது அவரிடம் தனக்கு நேர்ந்த விஷயங்களை சிறுமி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, அதுபற்றி தனது பாட்டியிடம் கூறினார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி, பள்ளிக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்த சிசுபாலன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை நடந்துவந்த போதே, சிசுபாலன் தற்கொலை செய்து கொண்டார். இதனால் சிறுமியின் தாய் மீதான வழக்கு விசாரணை மட்டும் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ரேகா, சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும் அவருக்கு ரூ20ஆயிரம் அபராதமும் விதித்தார்.
40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணின் இரு மகள்களும் தற்போது காப்பகத்தில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்