என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
காங்கிரஸில் இருக்கும்போது... ஹிமாந்தா சர்மாவை சாடிய பத்ருதீன் அஜ்மல்
- காங்கிரஸில் இருக்கும்போது முஸ்லீம்களின் வாக்குகளை பெற்றார்.
- தற்போது அமித் ஷா கட்டளையின்படி அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறார்.
அசாம் மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஹிமாந்தா பிஸ்வா சர்மா இருந்து வருகிறார். பா.ஜனதா கட்சியில் இணைவதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.
தற்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவரான பத்ருதீன் அஜ்மல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவை விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது முஸ்லீம்கள் வாக்குகளை பெற்ற ஹிமாந்தா பிஸ்வா சர்மா, தற்போது அவர்களுக்கு அநீதி இழைத்து வருகிறார் என விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து பத்ருதீன் அஜ்மல் கூறியதாவது:-
டாக்டர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, நீங்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போது முஸ்லீம்களின் வாக்குகளை பெற்றீர்கள். தற்போது அமித் ஷாவின் கட்டளைக்கு இணங்க முஸ்லீம்களுக்கு எதிராக அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
முஸ்லீம் சமூகம் சர்மாவுக்கு பெரும் வாக்கு வங்கியாக இருந்தது. தேர்தலுக்கு முன்பாக அவர் அதை இழக்கக் கூடாது. இருண்டு வருடம் காத்திருங்கள், ஹிமாந்தா மற்றும் யோகி ஆகிய நாத் ஆகிய இருவரும் பிரதமர் மந்திரிக்கான போட்டியில் இருப்பார்கள்.
இவ்வாறு தெரிவித்தார்.