search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    57 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலை.. எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத மாநிலமாகிறது மகாராஷ்டிரா
    X

    57 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலை.. எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத மாநிலமாகிறது மகாராஷ்டிரா

    • பாஜக 132 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி 41 இடங்களிலும் வென்றுள்ளது.
    • கடைசியாக கடந்த 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் இந்த சூழல் ஏற்பட்டது

    288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்றைய தினம் [நவம்பர் 23] வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக - ஷிண்டே சேனா - அஜித் பவார் என்சிபி] 230 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    கூட்டணியில் பாஜக 132 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி 41 இடங்களிலும் வென்றுள்ளது.

    ஆனால் எதிரணியான மகா விகாஸ் ஆகாதி அணியை சேர்ந்த காங்கிரஸ் 16 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 20 இடங்களிலும், சரத் பவார் என்சிபி 10 இடங்களிலும் என கூட்டணியே மொத்தமாக 46 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

    எனவே அமைய மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரே இல்லாத சூழல் உருவாகி உள்ளது. மகாராஷ்டிர அரசியலில் கடந்த 57 ஆண்டுகளில் இதுபோன்ற மோசமான சூழல் ஏற்பட்டது கிடையாது.

    பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற, மொத்தமுள்ள சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையில் 10% இடங்களை பெற்று இருக்க வேண்டும். 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 28 உறுப்பினர்களைத் தன்வசம் வைத்திருக்கும் கட்சியிலிருந்தே எதிர்க்கட்சித் தலைவரைப் பரிந்துரைக்க முடியும்.

    ஆனால் எதிர் கூட்டணியான மகா விகாஸ் அகாதியில் அதிகபட்சமான இடங்களை வென்றது உத்தவ் தாக்கரே சிவா சேனா. அதுவும் 20 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது.

    எனவே அவரும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோர முடியாது மகா விகாஸ் அகாதி கூட்டணி தேர்தலுக்கு முன்னரே உருவாகியிருந்தாலும், விதிகளின்படி, மூன்று கட்சிகளின் கூட்டு பலத்தைக் கொண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பெற முடியாது என்று சட்டமன்ற முன்னாள் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.

    இதுபோன்ற எதிர்கட்சித் தலைவர் இல்லாத சூழல் மகாராஷ்டிராவில் கடைசியாக கடந்த 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×