என் மலர்
இந்தியா

யஷ்வந்த் சின்காவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு- மத்திய அரசு அறிவிப்பு
- ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் 18-ந்தேதி நடைபெறுகிறது.
- பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை)18-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் அதன் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.
இவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து அவருக்கு மத்திய பாதுகாப்பு படை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு ஏற்கனவே இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






