search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா
    X

    காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஒய்எஸ்ஆர் தெலுங்கானா கட்சியின் தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா

    • ஒய்.எஸ்.ஷர்மிளா தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
    • ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஆந்திரபிரதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற கட்சியை நடத்தி வருகிறார். இதையடுத்து, கடந்த நவம்பர் 3-ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "தெலுங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. தேர்தலில் வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு எனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளேன். கேசிஆர் மற்றும் அவரது கூட்டாளிகளின் பெரும் ஊழலால், ஒரு பணக்கார மாநிலம் இப்போது பெரும் கடனில் சுமையில் சிக்கியுள்ளது" என கூறியிருந்தார்.

    அதனை தொடர்ந்து, ஐதராபாத்தில் ஜனவரி 2-ம் தேதி நடைபெற்ற கட்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஒய்எஸ் ஷர்மிளா, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை நேரில் சந்தித்து முக்கியமான அறிவிப்பை வெளியிடுவோம் என்று தெரிவித்திருந்தார்

    இந்நிலையில், டெல்லி சென்ற ஒய்எஸ் ஷர்மிளா, ஜனவரி 4-ம் தேதி அகில இந்தியா காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

    இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன், ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தது ஆந்திரபிரதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×