search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்
    X

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்

    • நாட்டு வெடிகுண்டுகள், பெட்ரோல் வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் சிக்கியது.
    • பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திராவில் கடந்த 13-ந் தேதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

    தேர்தல் நாள் அன்று ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேச கூட்டணியில் உள்ள ஜனசேனா, பா.ஜ.க கட்சியினருக்கும் இடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

    தேர்தல் முடிந்த பின்னரும் பல்நாடு, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் வீடுகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாட்டு வெடிகுண்டுகள், பெட்ரோல் வெடிகுண்டுகள், பயங்கர ஆயுதங்கள் சிக்கியது.

    அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இதில் போலீசாரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வன்முறையை தடுக்க தேர்தல் ஆணையம் துணை ராணுவ படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியது.

    இதையடுத்து உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் 25 கம்பெனி துணை ராணுவ படையினர் வன்முறை ஏற்படும் இடங்களில் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×