என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
- பிரபாத் ஜெயசூர்யா அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- உலக டெஸ்ட் சாப்பியன்ஷிப் தொடரில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் ஆவார்.
இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 27-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 191 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
அதனை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 42 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 149 ரன்களுடன் தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஜான்சன் மற்றும் இலங்கை வீரர் ஜெயசூர்யா ஆகியோர் பந்து வீச்சில் சாதனை படைத்துள்ளனர்.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா முதல் இன்னிங்சில் 2 விக்கெட், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது விக்கெட் எண்ணிக்கை 101 ஆக (17 டெஸ்ட்) உயர்ந்தது. டெஸ்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த சாதனையாளர் பட்டியலில் 2-வது இடத்தை 4 வீரர்களுடன் அவர் பகிர்ந்துள்ளார்.
அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தினார்
ஜார்ஜ் ஆல்பிரட் லோமன் (இங்கிலாந்து) - 1886-ல் 16 டெஸ்ட் போட்டிகள்
பிரபாத் ஜெயசூர்யா (இலங்கை) - 2024-ல் 17 டெஸ்ட் போட்டிகள்
யாசிர் ஷா (பாகிஸ்தான்) - 2014-ல் 17 டெஸ்ட் போட்டிகள்
சார்லி டர்னர் (ஆஸ்திரேலியா) - 1887-ல் 17 டெஸ்ட் போட்டிகள்
சிட்னி பார்ன்ஸ் (இங்கிலாந்து) - 1901-ல் 17 டெஸ்ட் போட்டிகள்
கிளாரி கிரிம்மெட் (ஆஸ்திரேலியா) - 1925-ல் 17 டெஸ்ட் போட்டிகள்
ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா) - 2011-ல் 18 டெஸ்ட் போட்டிகள்
இதேபோல ஜான்சன், உலக டெஸ்ட் சாப்பியன்ஷிப் தொடரில் ஒரு இன்னிங்சில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜான்சன் படைத்துள்ளார்.
WTC வரலாற்றில் ஒரு வேகப்பந்து வீச்சாளரின் சிறந்த பந்து வீச்சு:-
மார்கோ ஜான்சன் (தென்னாப்பிரிக்கா) - 2024-ல் இலங்கைக்கு எதிராக 7/13
மாட் ஹென்றி (நியூசிலாந்து) - 7/23 தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2022
கஸ் அட்கின்சன் (இங்கிலாந்து) - 7/45 வெஸ்ட் இண்டீஸ் எதிராக 2024
ஷர்துல் தாக்கூர் (இந்தியா) - 7/61 தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2022
மாட் ஹென்றி (நியூசிலாந்து) - 7/67 தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2024
42 ரன்னில் ஆல்-அவுட் ஆன இலங்கைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு 1994-ம் ஆண்டு கண்டியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 71 ரன்னில் ஆட்டமிழந்ததே குறைந்த ஸ்கோராக இருந்தது.
இலங்கையை சுருட்டுவதற்கு தென்ஆப்பிரிக்காவுக்கு மொத்தம் 83 பந்துகளே தேவைப்பட்டது. கடந்த 100 ஆண்டுகளில் குறைந்த பந்துகளில் 'சரண்' அடைந்த அணி இலங்கை தான். 1924-ம் ஆண்டு பர்மிங்காமில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து 75 பந்துகளில் தென்ஆப்பிரிக்காவை 30 ரன்னில் சுருட்டியதே இந்த வகையில் மோசமானதாக நீடிக்கிறது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு அணியின் குறைந்த ஸ்கோரும் இது தான். 2013-ம் ஆண்டு கேப்டவுனில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்து 45 ரன்னில் ஆல்-அவுட் ஆனதே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு அணியின் முந்தைய குறைந்த ஸ்கோராக இருந்தது.
- 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது.
- ஒல்லி போப் 77 ரன்னில் பிலீப்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
கிறிஸ்ட்சர்ச்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 319 ரன்கள் எடுத்திருந்தது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கனே வில்லியம்சன் 93 ரன்னில் அவுட்டானார். பிலிப்ஸ் 41 ரன்னும், சவுதி 10 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பொறுப்புடன் ஆடிய கிளென் பிலிப்ஸ் அரை சதம் கடந்தார். சவுத்தி 15 ரன்னிலும் அடுத்து வந்த வில்லியம் ஓரோர்கே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். பிலிப்ஸ் 58 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் பஷீர், பிரிடன் கேர்ஸ் தலா 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக சாக் கிராலி- பென் டக்கெட் களமிறங்கினர். சாக் கிராலி 0 ரன்னிலும் அடுத்து வந்த ஜேக்கப் பெத்தேல் 10, ஜோரூட் 0, டக்கெட் 46 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 71 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஹாரி ப்ரூக் - ஒல்லி போப் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் விளாசினார். 77 ரன்னில் போப் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி ப்ரூக் சதம் அடித்து அசத்தினார். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் பிடித்த கேட்ச் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 53 ஓவரை டிம் சவுத்தி வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தில் போப் அடித்த பந்தை நியூசிலாந்து அணியின் சிறந்த பீல்டரான கிளென் பிலிப்ஸ் பாய்ந்து பிடித்தார்.
பீல்டர் என்றால் முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரரான ஜாண்டி ரோட்ஸ் தான் நம் நினைவுக்கு வருவதுண்டு. அவரை போலவே இவரவும் அந்தரத்தில் கேட்ச் பிடித்து கிளென் பிலிப்ஸ் அசத்தி உள்ளார் எனவும் விட்டால் அவரையே மிஞ்சி விடுவார் எனவும் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Glenn Phillips adds another unbelievable catch to his career resume! The 151-run Brook-Pope (77) partnership is broken. Watch LIVE in NZ on TVNZ DUKE and TVNZ+ #ENGvNZ pic.twitter.com/6qmSCdpa8u
— BLACKCAPS (@BLACKCAPS) November 29, 2024
- இந்த தொடரை இந்திய அணி வெற்றியோடு தொடங்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
- இந்த வெற்றிக்கு பும்ரா, முகமது சிராஜ், ஹர்சித் ரானா, நிதிஷ்குமார் ஆகியோரை பாராட்ட வேண்டும்.
புதுடெல்லி:
பெர்த்தில் நடந்த டெஸ்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்தது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில், 'ஆஸ்திரேலிய அணி 295 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை நம்ப முடியவில்லை. இது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கும். 'டாஸ்' ஜெயித்து இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது சரியான முடிவா? என்று பலரும் என்னிடம் கேட்டனர்.
இதற்கு முன்பு பெர்த்தில் நடந்த 4 டெஸ்டுகளிலும் முதலில்பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. அதனால் முதலில் தான் பேட்டிங் செய்தாக வேண்டும். மேலும் மைதானத்தின் புள்ளி விவரங்களுக்கு எதிராக இந்திய அணி செல்ல விரும்பவில்லை.
முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்னில் சுருண்டாலும், அவர்களுக்கு பவுலிங்குக்கு உகந்த ஆடுகளத்தில் பந்து வீச வாய்ப்பு கிடைத்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இந்த வெற்றிக்கு அவர்களை பாராட்ட வேண்டும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த தொடரை இந்திய அணி வெற்றியோடு தொடங்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
தற்போது இந்தியா சொந்த மண்ணைவிட வெளிநாட்டில் சிறந்த அணியாக திகழ்கிறது. உள்ளூர் சூழலைவிட வெளிநாட்டு சீதோஷ்ண நிலை மற்றும் இங்குள்ள ஆடுகளத்துக்கு ஏற்ப நன்றாக விளையாடுகிறார்கள். அதை கடந்த வாரம் பெர்த் டெஸ்டில் நிரூபித்துள்ளனர்' என்றார்.
- ஒரு அணிக்கு ரூ.15 கோடி வரை செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- இது கடந்த ஆண்டைவிட ரூ.1½ கோடி அதிகமாகும்.
புதுடெல்லி:
ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் 3-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது.
இதில் பங்கேற்கும் 5 அணிகள் 71 வீராங்கனைகளை தக்கவைத்துள்ளன. மற்ற வீராங்கனைகள் ஏலத்துக்கு வருகிறார்கள்.
இந்த நிலையில் டபிள்யூ.பி.எல். போட்டிக்கான வீராங்கனைகளின் மினி ஏலம் வருகிற 15-ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது. ஒரு அணிக்கு ரூ.15 கோடி வரை செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1½ கோடி அதிகமாகும்.
- பயண கலைப்பு, தூக்கமின்மை பிரச்சினைக்காக எடுத்த மருந்தால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டு விட்டது.
- தனக்கு விதிக்கப்பட ஒரு மாத தடையை முறைப்படி ஏற்றுக்கொள்வதாக ஸ்வியாடெக் கூறினார்.
லண்டன்:
பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான இகா ஸ்வியாடெக்கிடம் (போலந்து) கடந்த ஆகஸ்டு மாதம், போட்டியில் பங்கேற்காத சமயத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர் ஒரு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. பிறகு அப்பீல் செய்ததால் இடைநீக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தனக்கு விதிக்கப்பட ஒரு மாத தடையை முறைப்படி ஏற்றுக்கொள்வதாக 23 வயதான ஸ்வியாடெக் தற்போது அறிவித்த பிறகே அவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய தகவல் அனைவருக்கும் தெரிந்துள்ளது. 'இது தெரியாமல் நடந்த தவறு, பயண கலைப்பு, தூக்கமின்மை பிரச்சினைக்காக எடுத்த மெலடோனின் மருந்தால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டு விட்டது' என ஸ்வியாடெக் அளித்த விளக்கத்தை விசாரணை கமிட்டியினர் ஏற்றுக்கொண்டதால் குறைந்த தண்டனையுடன் தப்பித்தார். வருகிற 4-ந்தேதிக்கு பிறகு அவர் போட்டிகளில் பங்கேற்கலாம்.
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது.
- இந்திய அணி விளையாடாவிட்டால் அதன் பிறகு வருங்காலங்களில் இந்தியாவில் நடக்கும் ஐ.சி.சி. தொடர்களுக்கு நாங்களும் அங்கு செல்லமாட்டோம்.
துபாய்:
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லீக் மற்றும் இரண்டு அரைஇறுதி, இறுதிப்போட்டி என மொத்தம் 15 ஆட்டங்களை கொண்டது.
ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணி இந்த முறையும் அங்கு செல்ல மறுத்து விட்டது. அதற்கு பதிலாக ஆசிய கோப்பை போட்டி போன்று தங்களுக்குரிய ஆட்டங்களை மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சாம்பியன்ஸ் கோப்பை போட்டி முழுமையாக பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என்று கூறியது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவது தாமதமாகியுள்ளது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் போட்டி அட்டவணையை இறுதி செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நிர்வாக கமிட்டி இயக்குனர்கள் கூட்டம் இன்று நடக்கிறது. காணொலி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது யோசனையை தெரிவிப்பார்கள்.
ஐ.சி.சி.யை பொறுத்தவரை இந்திய அணிக்குரிய ஆட்டங்களை மட்டும் வேறு நாட்டில் நடத்துவதற்கு சம்மதிக்கும்படி பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் என்று தெரிகிறது. 10 ஆட்டங்களை பாகிஸ்தானிலும், 5 ஆட்டங்களை வேறு நாட்டிலும் நடத்தலாம் என்ற பரிந்துரையை ஐ.சி.சி. முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டால் சிக்கல் தீரும். ஆனால் அவர்கள் எதுக்கும் பிடிகொடுக்காவிட்டால், போட்டி முழுமையாக வேறு நாட்டிற்கு மாற்றப்படலாம் அல்லது தள்ளிவைக்கப்படலாம்.
பாகிஸ்தானில் அரசியல் போராட்டத்தில் வெடித்த வன்முறை எதிரொலியாக, இலங்கை 'ஏ' அணி அங்கு மேலும் 2 ஆட்டங்களில் விளையாட வேண்டிய நிலையில் பாதியிலேயே தொடரை ரத்து செய்து விட்டு தாயகம் திரும்பியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று கூறுகையில், 'இந்திய அணிக்குரிய ஆட்டங்களை வேறு நாட்டிற்கு மாற்றும் திட்டத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்பதை ஐ.சி.சி.யிடம் சில மணி நேரத்திற்கு முன்பாக தெரிவித்து விட்டோம்.
இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாவிட்டால் அதன் பிறகு வருங்காலங்களில் இந்தியாவில் நடக்கும் ஐ.சி.சி. தொடர்களுக்கு நாங்களும் அங்கு செல்லமாட்டோம். அதற்கு பதிலாக பாகிஸ்தான் அணிக்குரிய ஆட்டங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்கவேண்டிய சூழல் வரும். ஐ.சி.சி. விதிப்படி, தங்கள் நாட்டு அரசாங்கம் குறிப்பிட்ட நாட்டிற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்று எந்த அணி கூறினாலும், என்ன காரணம் என்றாலும் சரி அரசாங்கத்தின் எழுத்துப்பூர்வமான உத்தரவை சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் அத்தகைய உத்தரவை இதுவரை நாங்கள் பார்க்கவில்லை' என்றார்.
- சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீரர் லக்ஷயா சென் காலிறுதிக்கு முன்னேறினார்.
லக்னோ:
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், இஸ்ரேலின் டேனில் டுபோவென்கோவை 21-14, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 35 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
லக்ஷயா சென் காலிறுதியில் சகநாட்டு வீரர் லுவாங் மைனமை எதிர்கொள்கிறார்.
- டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 348 ரன்கள் எடுத்தது.
கிறிஸ்ட்சர்ச்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கான்வே 2 ரன்னும், கேப்டன் டாம் லாதம் 47 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 34 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் இறங்கிய முன்னாள் கேப்டன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்களை கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து வந்த டேரில் மிட்செல் 19, டாம் பிளெண்டல் 17, நாதன் ஸ்மித் 3, மேட் ஹென்றி 18 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனையடுத்து பிலிப்ஸ் - டிம் சவுதி ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினார்.
முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 319 ரன்கள் எடுத்திருந்தது. பிலிப்ஸ் 41 ரன்னும், சவுதி 10 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பொறுப்புடன் ஆடிய கிளென் பிலிப்ஸ் அரை சதம் கடந்து 58 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 348 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் பஷீர், பிரிடன் கேர்ஸ் தலா 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது.
- 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இருந்தார்.
- சித்தார்த் கவுல் தற்போது ஓய்வை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.
புதுடெல்லி:
இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் 2018-ல் அயர்லாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக தனது டி20 சர்வதேச போட்டியில் அறிமுகமானார். அதே ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு அணிகளில் விளையாடி உள்ளார்.
இந்நிலையில், சித்தார்த் கவுல் எக்ஸ் வலைதளப் பக்கத்தில், தற்போது ஓய்வை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.
விராட் கோலி தலைமையிலான (2008) 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் சித்தார்த் கவுல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.
லக்னோ:
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் தொடர் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள், இங்கிலாந்து, சீனா, இலங்கை, தாய்லாந்தைச் சேர்ந்த இளம், வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஈஷா சர்மாவை 21-10, 12-21, 21-15 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி சுமார் 49 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
பி.வி.சிந்து காலிறுதியில் சீனாவின் டாய் விங்கை எதிர்கொள்கிறார்.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 9-வது வெற்றியைப் பதிவு செய்தது.
நொய்டா:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.
இதில், நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் உபி யோதாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய உ.பி. யோதாஸ் அணி 33-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள உ.பி.யோதாஸ் 7 வெற்றி, 6 தோல்வி, ஒரு டிரா என 43 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
மற்றொரு போட்டியில் தெலுங்கு டைடன்ஸ் அணி 41- 35 என யு மும்பா அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது.
- ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.
- இதில் 2வது சுற்றில் இந்தியா ஜப்பானை வென்றது.
மஸ்கட்:
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. டிசம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்தும், பி பிரிவில் பாகிஸ்தான், மலேசியா, வங்காளதேசம், ஓமன், சீனாவும் இடம் பிடித்துள்ளன.
நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா தாய்லாந்தை வீழ்த்தியது.
இந்நிலையில், இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் ஜப்பானைச் சந்தித்தது. இதில் இந்தியா 3-2 என திரில் வெற்றி பெற்றது.
சனிக்கிழமை நடைபெறும் அடுத்த லீக் போட்டியில் இந்தியா சீன தைபே அணியை எதிர்கொள்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்