search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மைதான எல்லைகளை அதிகரிக்க வேண்டும்- அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
    X

    மைதான எல்லைகளை அதிகரிக்க வேண்டும்- அனில் கும்ப்ளே வலியுறுத்தல்

    • பேட்டிங்க்கும், பந்துவீச்சுக்கும் சம நிலையான போட்டி இருக்க வேண்டும்.
    • சில காலம் கழித்து இந்தியாவில் பந்து வீச இளைஞர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

    இந்திய அணி முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமாக இருந்துள்ளது. குறிப்பாக தொடரின் முதல் பாதி மிகுந்த சிரமத்தை கொடுத்தது.

    பந்துவீச்சாளர்களை பாதுகாக்க சில மாற்றங்களை செய்ய வேண்டும். இந்தியாவில் இருக்கும் எல்லா மைதானத்தின் எல்லைகளும் அதிகரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மைதானத்திலும் பவுண்டரி எல்லையை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். முதல் கட்டமாக, பவுண்டரி எல்லையை ஒட்டி அணியினர் அமர்ந்திருக்கும் டக் அவுட்டை நீங்கள் மைதானத்தில் ரசிகர்கள் இருக்கும் பகுதிக்கு நகர்த்தலாம். மேலும் பந்தின் தையல் கொஞ்சம் பெரிதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வது, பந்தில் கொஞ்சம் அசைவு இருப்பதற்கு உதவி செய்யும். பேட்டிங்க்கும், பந்துவீச்சுக்கும் சம நிலையான போட்டி இருக்க வேண்டும். எனவே இத்தகைய மாற்றங்களை செய்தாக வேண்டும். இல்லையென்றால் சில காலம் கழித்து இந்தியாவில் பந்து வீச இளைஞர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். 20 ஓவர் உலகக்கோப்பையில் அயர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் ஆட்டத்தில் எந்த சுழற்பந்து வீச்சாளர் இடம் பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் குல்தீப் யாதவ் நிச்சயம் இருப்பார். குல்தீப் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் என்பதால் இந்தியாவின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×