என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் லவ்லினா
- இந்தியாவின் லவ்லினா, அல்பியா பதான் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
- இந்த தொடரில் இந்தியாவுக்கு ஏற்கனவே 12 பதக்கங்கள் உறுதியாகி இருந்தன.
ஜோர்டான்:
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் 12 இந்திய வீரர், வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளதால் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு ஏற்கனவே 12 பதக்கங்கள் (குறைந்தது வெண்கலப் பதக்கம்) உறுதியாகி இருந்தன.
இந்நிலையில், பெண்களுக்கான அரையிறுதி போட்டி நேற்று தொடங்கியது. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) கொரிய குடியரசின் சியோங் சுயோனை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலெ புத்திசாலித்தனமாக ஆடிய லவ்லினா இறுதியில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் அவர் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
அதேபோல், இந்தியாவின் அல்பியா பதான் 81+ கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் அங்குஷிதா போரோ (75 கிலோ) தோல்வி அடைந்து வெண்கலம் வென்றார்.