search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    வினேஷ் போகத் விவகாரம்: இன்று இரவு தீர்ப்பை அறிவிக்கிறது சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வினேஷ் போகத் விவகாரம்: இன்று இரவு தீர்ப்பை அறிவிக்கிறது சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம்

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.
    • தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.

    இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.

    தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்கிடையே, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது. இந்த விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், வினேஷ் போகத் விவகாரத்தில் இன்று இரவு 9-30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×