என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
விளையாட்டு
![செஸ் ஒலிம்பியாட் போட்டி: 9-வது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி செஸ் ஒலிம்பியாட் போட்டி: 9-வது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி](https://media.maalaimalar.com/h-upload/2022/08/08/1742748-prakgnantha.jpg)
X
பிரக்ஞானந்தா
செஸ் ஒலிம்பியாட் போட்டி: 9-வது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி
By
மாலை மலர்8 Aug 2022 5:45 AM IST (Updated: 8 Aug 2022 6:20 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 66-வது காய் நகர்த்தலில் அஜர்பைஜான் வீரரை வீழ்த்தினார்.
- கிராண்ட் மாஸ்டரானார் தமிழக இளம் செஸ் வீரர் வி.பிரணவ்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியது. நேற்று நடைபெற்ற 9-வது சுற்று ஆட்ட ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, அஜர்பைஜான் வீரர் துரார்பெய்லி வாசிப்புடன் மோதினார். பிரக்ஞானந்தா 66-வது நகர்த்தலின் முடிவில் வாசிப்பை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர் வி.பிரணவ். ருமேனியாவில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றதும் மூலம் கிராண்ட்மாஸ்டர் தரநிலையை வெற்றிகரமாக அடைந்துள்ளார். இதையடுத்து அவர் இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டரானார். தமிழ்நாட்டில் இருந்து கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டிய 27-வது வீரர் பிரணவ் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X