என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ்: சரத் கமல்-சத்யன் ஜோடி வெள்ளி வென்றது
- இந்தியா இதுவரை 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 49 பதக்கங்கள் பெற்றுள்ளது.
- நியூசிலாந்து மேலும் ஒரு தங்கம் வென்று இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.
பர்மிங்காம்:
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குத்துச்சண்டை போட்டிகளில் 3 தங்கம் வென்றுள்ளனர்.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சரத் கமல், ஜி.சத்யன் ஜோடி, இங்கிலாந்தின் பால் டிரிங்கால்-லியம் பிட்ச்போர்டு ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 11-8, 8-11, 3-11, 11-7, 4-11 என தோல்வி அடைந்து, வெள்ளிப் பதக்கத்தை பெற்றனர்.
இதன்மூலம் இந்தியா 17 தங்கம், 13 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 49 பதக்கங்கள் பெற்றுள்ளது. அதேசமயம், நியூசிலாந்து இன்று மேலும் ஒரு தங்கம் வென்று 18 தங்கப் பதக்கங்களுடன், இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பதக்க பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது.