search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2-வது டெஸ்ட்: 4 இன்னிங்சில் வெறும் 20 ரன்கள்.. சொதப்பிய கேப்டன் ருதுராஜ்
    X

    2-வது டெஸ்ட்: 4 இன்னிங்சில் வெறும் 20 ரன்கள்.. சொதப்பிய கேப்டன் ருதுராஜ்

    • முதல் இன்னிங்சில் இந்திய ஏ அணி 161 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலிய ஏ அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    மெல்போர்ன்:

    இந்தியா 'ஏ'-ஆஸ்திரேலியா 'ஏ'அணிகள் இடையே 4 நாள் போட்டிக் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இந்திய 'ஏ' அணி ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. ஜூரெலின் அரை சதத்தின் மூலம் இந்திய அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய ஏ அணி தரப்பில் நேசர் 4 விக்கெட்டும் வெப்ஸ்டர் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    இதனையடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது. முதல் இன்னிங்சை போலவே 2-வது இன்னிங்சிலும் இந்திய அணி தடுமாறியது. அபிமன்யூ 17, கேஎல் ராகுல் 10, சாய் சுதர்சன் 3, கேப்டன் ருதுராஜ் 11, படிக்கல் 1 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 31 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் எடுத்துள்ளது.

    பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்னோட்டமாக நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய ஏ அணி கேப்டன் ருதுராஜ் சொதப்பி உள்ளார். அவர் 4 இன்னிங்ஸிலும் சேர்த்து 20 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    பார்டர்- கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் இடம்பெறாத நிலையில் இந்த தொடரில் சிறப்பாக ஆடினால் தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது

    Next Story
    ×