என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ரகானே, பிரித்வி ஷா, ஷிவம் டுபே அபாரம்: உலக சாதனைப் படைத்த மும்பை அணி
- முதலில் பேட்டிங் செய்த விதர்பா 221 ரன்கள் குவித்தது.
- மும்பை 19.2 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.
இந்தியாவில் சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் விதர்பா- மும்பை அணிகள் மோதின. முதலில் விளையாடிய விதர்வா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது.
பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ரகானே ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரித்வி ஷா 26 பந்தில் 49 ரன்கள் சேர்த்தார். ரகானே 45 பந்தில் 84 ரன்கள் விளாசினார்.
ஷிபம் டுபே 22 பந்தில் 37 ரன்களும், சூரயான்ஷ் ஷெட்ஜ் 12 பந்தில் 36 ரன்களும் அடிக்க மும்பை அணி 19.2 ஓவரில் 224 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
222 இலக்கை எட்டியதன் மூலம் டி20 நாக்அவுட் போட்டியில் அதிக ரன்களை துரத்திப்பிடித்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக 2010-ல் நடைபெற்ற பைசல் பேங்க் டி20 கோப்பை (Faysal Bank T20 Cup 2010) கோப்பையில் கராச்சி அணி ராவல்பிண்டி அணிக்கெதிராக 210 ரன்களை சேஸிங் செய்தது.