என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2024-ம் ஆண்டின் சிறந்த டி20 பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் தேர்வு
    X

    2024-ம் ஆண்டின் சிறந்த டி20 பந்து வீச்சாளராக அர்ஷ்தீப் சிங் தேர்வு

    • ஐசிசி டி20 தரவரிசையில் அர்ஷ்தீப் சிங் 8-வது இடத்தில் உள்ளார்.
    • கடந்த ஆண்டில் 18 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஆண்டின் (2024) சிறந்த ஆண்கள் டி20 வீரராக இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங்கை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டில் 18 போட்டிகளில் விளையாடி 36 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இவர் ஐசிசி டி20 தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் (17) வீழ்த்தியவர்களில் 2-வது இடத்தில் அர்ஷ்தீப் சிங் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×