என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
மிரட்டிய இந்தியா: 3-ம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா
- 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தது.
- பும்ரா 2 விக்கெட்டும் சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பெர்த்:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா 2-வது நாளில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் அடித்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கேஎல் ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
The final over of the day, the perfect finish for India #AUSvIND pic.twitter.com/Pci4mZdEpW
— cricket.com.au (@cricketcomau) November 24, 2024
இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு முதல் ஓவரிலேயே பும்ரா செக் வைத்தார். தொடக்க ஆட்டக்காரர் ஆன மெக்ஸ்வீனியை டக் அவுட்டில் வெளியேறினார். இதனையடுத்து நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய கம்மின்சை சிராஜ் அவுட்டாக்கினார். மேலும் பும்ரா அடுத்த ஓவரிலேயே லபுசாக்னேவை வீழ்த்த அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆஸ்திரேலியா 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புள்ளது. உஸ்மான் கவஜா 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்.