search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றிபெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
    X

    சிட்னி டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றிபெற 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

    • இந்தியா 2வது இன்னிங்சில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஆஸ்திரேலியாவின் போலண்ட் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    சிட்னி:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடந்து வருகிறது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 185 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 181 ரன்களில் சுருண்டது. வெப்ஸ்டர் 57 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 3 விக்கெட்டும், பும்ரா, நிதிஷ்குமார் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    4 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. ஜடேஜா 8 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சிராஜ் மற்றும் பும்ரா விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில் இந்தியா 2வது இன்னிங்சில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் போலண்ட் 6 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

    Next Story
    ×