search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஸ்காட் போலண்ட் வேகத்தில் தடுமாறிய இந்தியா: 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 141/6
    X

    ஸ்காட் போலண்ட் வேகத்தில் தடுமாறிய இந்தியா: 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 141/6

    • விராட் கோலி எப்பவும் போல அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் திசையில் அவுட் ஆனார்.
    • ஆஸ்திரேலிய தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

    இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் 4 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    இந்த இன்னிங்சிலும் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலாக இருந்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல் களமிறங்கினர். பொறுமையாக விளையாடிய கேஎல் ராகுல் திடீரென அதிரடியாக விளையாட முயற்சித்தார். இதனால் அவர் 13 ரன்னில் அவுட் ஆனார்.

    போலண்ட் பந்து வீச்சில் திணறி வந்த ஜெய்ஸ்வால் அவர் ஓவரிலேயே போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த சுப்கில் அதிரடியாக விளையாட முயற்சித்தார். வெளியில் சென்ற பந்தை அடிக்க முயற்சித்தார். இப்படி அடிக்கடி அதிரடியாக விளையாட முயன்றார். ஆஸ்திரேலியாவின் அறிமுக வீரர் பந்தை இறங்கி வந்த அடிக்க முயற்சித்த போது கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அடுத்த சிறிது நேரத்தில் விராட் கோலி எப்பவும் போல அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் திசையில் சென்ற பந்தை அடிக்க முயற்சித்து 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் தான் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக மாற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி பண்ட் சிக்சர் அடித்து (29 பந்தில்) அரை சதம் கடந்தார். அவர் 61 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 4 ரன்னில் வெளியேறினார். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் போலண்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×