என் மலர்
கிரிக்கெட் (Cricket)
பிரிஸ்பேன் டெஸ்ட்: பாலோ-ஆன் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும்- ஸ்டார்க் சொல்கிறார்
- பாலோ-ஆன் தவிர்க்க இந்தியா 245 ரன்கள் எடுக்க வேண்டும்.
- மழை குறுக்கீட்டால் இந்தியாவை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வைத்து ஆல்அவுட் ஆக்க ஆஸி. முயற்சிக்கும்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கியது. 51 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கே.எல். ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இந்த மூன்று நாட்களும் மழையால் ஆட்டம் தடைபட்டுள்ளது. இன்னும் இரண்டு நாள் ஆட்டத்தில் ஒரு செசன் மழையால் தடைபட்டால் போட்டி டிரா ஆக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் இந்தியாவை குறைந்த ரன்னில் சுருட்டி பாலோ-ஆன் கொடுக்க முயற்சிப்போம் என ஸ்டார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மிட்செல் ஸ்டார்க் கூறுகையில் "இந்தியா 51 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் நாங்கள் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளோம். விக்கெட் (ஆடுகளம்) இன்னும் பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது. நாளை நாங்கள் பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்தோம் என்றால், முன்னதாகவே இந்திய விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். இது இந்தியாவை பாலோ-ஆன் ஆக்க கூடுதல் வாய்ப்பை கொடுக்கும்" என்றார்.
மழை குறுக்கீடு இருப்பதால் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யாமல் இந்தியாவை பேட்டிங் செய்ய வைக்க முயற்சிக்கும்.
245 ரன்கள் அடித்தால்தான் இந்தியா பாலோ-ஆன் தவிர்க்க முடியும். அதற்குள் இந்தியாவை ஆல்-அவுட் ஆக்கி, தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வைத்து, அதிலும் குறைந்த ரன்னில் சுருட்டி வெற்றி பெற விரும்பும். இதனால் பாலோ-ஆன் ஆக்க முயற்சிப்போம் என ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.