என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
X
கடைசி 5 வருடத்தில் முதல் முறை: டாப் 10-ல் இருந்து வெளியேறிய பாபர் அசாம்
Byமாலை மலர்4 Sept 2024 6:17 PM IST
- வங்கதேசத்திற்கு எதிராக 4 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 64 ரன்கள் மட்டுமே பாபர் அசாம் சேர்த்துள்ளார்.
- ஐசிசி தரவரிசையில் 12-வது இடத்திற்கு பாபர் அசாம் தள்ளப்பட்டார்.
ராவல்பிண்டி:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் 2-வது டெஸ்ட்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
இந்த தொடரில் மோசமாக விளையாடிய பாபர் அசாம், 4 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 64 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் கடந்த 5 வருடத்தில் முதல் முறையாக டாப் 10-ல் இருந்து பாபர் அசாம் வெளியேறி 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் டெஸ்ட்டில் 50-க்கு மேற்பட்ட ரன்களை கடைசியாக 2022-ம் ஆண்டுக்கு பிறகு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×