search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பேட், பந்து இல்லாமல் ரசிகருடன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடிய பென் டக்கெட்- வைரலாகும் வீடியோ
    X

    பேட், பந்து இல்லாமல் ரசிகருடன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடிய பென் டக்கெட்- வைரலாகும் வீடியோ

    • முதல் 4 போட்டிகள் முடிவில் 3-1 என்ற கணக்கில் தொடரை இந்தியா கைப்பற்றியது.
    • இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் நடக்கிறது.

    இங்கிலாந்து அணி டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரில் முன்னிலை வகித்தது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்றிரவு நடந்தது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நாளை இரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பையில் நடக்கிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடுவதற்காக இரு அணி வீரர்களும் மும்பை சென்றனர். இதில் இங்கிலாந்து வீரர்கள் ஜேமி ஓவர்டன், ஹாரிப்ரூக், பென்டக்கெட் மற்றும் இன்னும் இருவர் மும்பையின் ஓவல் மைதானம் வழியாக தங்கள் சர்ச்கேட் ஹோட்டலுக்கு நடந்து சென்றனர்.

    அப்போது இங்கிலாந்து அணியினரில் ஒருவரான பென் டக்கெட் அங்கு ரசிகருடன் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடினார். ரசிகர் பந்து இல்லாமலே சைகை மூலம் பந்து வீசினார். அதனை பேட் இல்லாமல் டக்கெட் சைகை மூலம் பேட்டிங் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×