என் மலர்
கிரிக்கெட் (Cricket)
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: இந்திய அணி நாளை அறிவிப்பு
- சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது.
- இந்தியா, பாகிஸ்தான் அணிகளை தவிர மற்ற அணிகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டனர்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தவிர்த்து மற்ற அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
இத்தொடரில் விளையாடும் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு நாளை காலை மும்பையில் அணிகளைத் தேர்ந்தெடுக்கும். கூட்டம் முடிந்து அணிகள் இறுதி செய்யப்பட்டவுடன், அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மதியம் 12:30 மணிக்கு வான்கடே மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து இந்திய அணியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.