search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியா வரவில்லை என்றால் பாகிஸ்தான், ஐசிசி 844 கோடி ரூபாயை இழக்கும்: எச்சரிக்கும் அக்தர்
    X

    இந்தியா வரவில்லை என்றால் பாகிஸ்தான், ஐசிசி 844 கோடி ரூபாயை இழக்கும்: எச்சரிக்கும் அக்தர்

    • பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்பதை இந்தியா தெரிவித்துவிட்டது.
    • பாகிஸ்தானை விட்டு போட்டியை வேறு இடத்திற்கு மாற்றமாட்டோம் என பிசிபி உறுதி.

    பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பங்கேற்காது எனத் தெரிவித்துவிட்டது. அதேவேளையில் போட்டியை பாகிஸ்தானில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது இல்லை என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது.

    இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி குறித்து இறுதி முடிவு எடுக்காமல் உள்ளது. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் மற்றும் ஐசிசி சுமார் 844 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க நேரிடும் என சோயிக் அக்தர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சோயிப் அக்தர் கூறுகையில் "பாகிஸ்தான் இந்தியாவை தனது மண்ணுக்குக்கு அல்லது பொதுவான இடத்திற்கு வரவழைத்து போட்டியில் விளையாட வைக்க முடியவில்லை என்றால் இரண்டு விசயங்கள் நடைபெறும்.

    முதலில் ஸ்பான்சர்சிப்பில் மூலம் பெறும் வருவாயில் ஐசிசி மற்றும் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் 100 மில்லியன் டாலர் (844 கோடி ரூபாய்) இழக்க நேரிடும். 2-வது இந்தியா பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்து லாகூரில் விளையாடி தோற்றாலும் சரி வெற்றி பெற்றாலும் சரி, எது நடந்தாலும் சிறந்ததாக இருக்கும்" என்றார்.

    Next Story
    ×