search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அஸ்வின் சுழலில் சிக்கிய வங்கதேசம்.. 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
    X

    அஸ்வின் சுழலில் சிக்கிய வங்கதேசம்.. 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

    • முதல் இன்னிங்சில் அஸ்வின் சதமடித்து அசத்தினார்.
    • 2-வது இன்னிங்சில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வின் சதத்தால் 376 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 4 விக்கெட் இழப்பிற்க 287 ரன்கள் அடித்திருக்கும்போது 2-வது இன்னிங்சை இந்தியா டிக்ளேர் செய்தது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

    2 ஆவது இன்னிங்ஸ் முடிவில் மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பின்னர் 515 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வங்கதேச அணி 2 ஆவது இன்னிங்சில் களம் இறங்கியது.

    இந்திய வீரர் அஸ்வினின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் சாண்டோ 82 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அஷ்வின் 6 விக்கெட்டும் ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    Next Story
    ×