என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
என்னப்பா 11 பேரும் பந்துவீசி இருக்கீங்க? டி20 கிரிக்கெட்டில் வேற லெவல் சாதனை படைத்த டெல்லி
- மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
- மணிப்பூர் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக டெல்லி அணி 11 வீரர்களையும் பந்துவீச வைத்து சாதனை படைத்துள்ளது. சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் மணிப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் தான் டெல்லி அணி இந்த சாதனையை படைத்துள்ளது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பந்துவீசிய மணிப்பூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. டெல்லி அணி கேப்டன் ஆயுஷ் பதோனி வழக்கத்திற்கு மாறாக யுத்தி அமைத்து செயல்பட்டார். விக்கெட் கீப்பரான ஆயுஷ் தானும் இரண்டு ஓவர்கள் பந்துவீசினார். இவர் வீசிய 2-வது ஓவர் மெய்டனாக மாறியது.
டெல்லி அணியின் 11 பந்துவீச்சாளர்கள் மணிப்பூர் அணியை 20 ஓவர்களில் 120 ரன்களில் கட்டுப்படுத்தியது. இதில் மணிப்பூர் அணி எட்டு விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக டி20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியும் 11 வீரர்களையும் பந்துவீச செய்ததில்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இந்திய அணியின் அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி 11 வீரர்களையும் பந்துவீச செய்தார். இந்த போட்டி 2002 ஆம் ஆண்டு நடைபெற்றது.