என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஒவ்வொரு சீசனிலும் கேப்டன்களை மாற்றும் பஞ்சாப் அணி வீரர்கள் விவரம்
    X

    ஒவ்வொரு சீசனிலும் கேப்டன்களை மாற்றும் பஞ்சாப் அணி வீரர்கள் விவரம்

    • பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் ஒவ்வொரு சீசனிலும் புதிய கேப்டனை அறிவிப்பார்கள்.
    • இந்த முறை ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் பஞ்சாப் அணி களமிறங்கும்.

    கடந்த ஐபிஎல் சீசனில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது. இதனையடுத்து அவர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதன் மூலம் ஏலத்தில் வந்த அவரை பஞ்சாப் அணி ரூ. 26.75 கோடிக்கு வாங்கியது.

    பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் ஒவ்வொரு சீசனிலும் புதிய கேப்டனை அறிவிப்பார்கள். அந்த வகையில் இந்த முறை ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் பஞ்சாப் அணி களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

    பஞ்சாப் அணியில் பேட்டிங் ஷ்ரேயாஸ் அய்யர், ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ளென் மேக்ஸ்வெல், நேஹல் வதேரா, ஆகியோர் உள்ளனர். உள்ளூர் வீரர்களான ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங் போன சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரயும் கவர்ந்தனர்.

    ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டோய்னிஸ், ஜோஷ் இங்கிலிஸ் உள்ளனர். அதே அணியை சேர்ந்த மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியா அணியில் மட்டுமே பார்மில் இருப்பார். ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

    பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சன், முஷீர் கானும் சுழற்பந்து வீச்சில் ஹர்பிரீத் ப்ரார், சாஹல், மேக்ஸ்வெல் உள்ளனர்.

    ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், அர்ஷ்தீப் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ளென் மேக்ஸ்வெல், நேஹல் வதேரா, ஹர்பிரீத் ப்ரார், விஷ்ணு வினோத், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், மார்கோ ஜான்சன், ஜோஷ் இங்கிலிஸ், லாக்கி இங்கிலிஸ், லாக்கி ஹர்மாட், லாக்கி ஃபிர்மட் , குல்தீப் சென், பிரியான்ஷ் ஆர்யா, ஆரோன் ஹார்டி, முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவின் துபே.

    Next Story
    ×