என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![தங்க முட்டையிடும் வாத்தை கொன்றுவிடாதீர்கள்- பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்குவது குறித்து முகமது கைப் கருத்து தங்க முட்டையிடும் வாத்தை கொன்றுவிடாதீர்கள்- பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்குவது குறித்து முகமது கைப் கருத்து](https://media.maalaimalar.com/h-upload/2025/01/08/7964681-jaspr.webp)
தங்க முட்டையிடும் வாத்தை கொன்றுவிடாதீர்கள்- பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்குவது குறித்து முகமது கைப் கருத்து
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்குவதற்கு முன்பாக ஒன்றுக்கு இரு முறை பிசிசிஐ யோசிக்க வேண்டும்.
- விக்கெட்டுகள் எடுப்பது மற்றும் நல்ல உடல் வலிமையுடன் இருப்பதில் அவரது முழு கவனமும் இருக்க வேண்டும்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த தொடரில் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் டெஸ்ட்டில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
அதன்பிறகு 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். ஆனால் 2 போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவியது. இதனால் அவரது கேப்டஷிப் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. இதனால் அவரை கேப்டஷிப்-ல் இருந்து நீக்கி பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்குவதற்கு முன்பாக ஒன்றுக்கு இரு முறை பிசிசிஐ யோசிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்குவதற்கு முன்பாக ஒன்றுக்கு இரு முறை பிசிசிஐ யோசிக்க வேண்டும். விக்கெட்டுகள் எடுப்பது மற்றும் நல்ல உடல் வலிமையுடன் இருப்பதில் அவரது முழு கவனமும் இருக்க வேண்டும். ஏனென்றால் பும்ரா விக்கெட்டுகள் எடுப்பதிலும் உடல் தகுதியை பேணி காப்பதிலும் தான் தன்னுடைய முழு கவனத்தை செலுத்த வேண்டும். இதில் அணியை வழிநடத்தும் பொறுப்பை பும்ராவுக்கு வழங்கினால் அது நிச்சயம் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
முக்கியமான சமயத்தில் கேப்டனாக அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என அவர் கூடுதல் உழைப்பை செலுத்துவதன் மூலம் காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் பும்ராவின் மிக பிரம்மாண்டமான கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரலாம். எனவே தங்க முட்டை இடும் வாத்தை கொன்று விடாதீர்கள்
இவ்வாறு முகமது கைப் கூறினார்.