என் மலர்
கிரிக்கெட் (Cricket)

துபாய் சாதகமான மைதானம்: அதை பற்றி சிந்திக்காமல் இந்தியாவை வீழ்த்துவோம்- பிரேஸ்வெல்

- ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக எங்களுடைய ரெக்கார்ட் நன்றாக இருக்கிறது.
- நாங்கள் எங்களுடைய ஸ்டைலில் கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் விளையாடி வருகிறது. அங்கே வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்ததாக நாளை நியூசிலாந்து அணியை இந்தியா சந்திக்கிறது.
முன்னதாக துபாயில் விளையாடுவதால் இந்திய அணிக்கு பெரிய சாதகம் இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-இந்நிலையில் துபாயில் விளையாடுவதால் இந்தியாவுக்கு சாதகம் இருக்கிறது என்றாலும் அதைப் பற்றி விமர்சிப்பது நியாயமில்லை என்று நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார்.
இது பற்றி பிரேஸ்வெல் பேசியது பின்வருமாறு.
அது முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து அதைப் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. சொல்லப்போனால் அது ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தும் விஷயமாகும். தனிப்பட்ட முறையில் எனக்கு வித்தியாசமான மைதானத்திற்கு வந்து இங்குள்ள சூழ்நிலைகளை கண்டறிவது சுவாரசியமாகும்.
எனவே இந்த ஆவலான சூழ்நிலைகளில் கற்றுக்கொண்டு நன்றாக முயற்சித்து விளையாடுவதைத் தவிர்த்து வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. எனவே துபாயில் எங்கள் முன்னே இருக்கும் சூழ்நிலைகளில் நாங்கள் தொடர்ந்து அசத்துவோம் என்று நம்புகிறோம்.
இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் நாங்கள் மகத்தான வெற்றியைப் பெற்ற தன்னம்பிக்கையுடன் இங்கே வந்துள்ளோம். மேலும் ஐசிசி தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக எங்களுடைய ரெக்கார்ட் நன்றாக இருக்கிறது. எனவே நாங்கள் எங்களுடைய ஸ்டைலில் கிரிக்கெட்டை விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம்.
ஐசிசி தொடரில் இந்தியாவை எதிர்கொள்வது கண்டிப்பாக மிகவும் பெரியப் போட்டி. இதில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்பாக நாங்கள் நிறைய வேகத்தை எடுத்துச் செல்ல முடியும்.
என்று பிரேஸ்வெல் கூறினார்.