என் மலர்
கிரிக்கெட் (Cricket)
13 மாதத்திற்கு பிறகு கம்பேக் கொடுத்த ரூட்.. முதல் ஒருநாள் போட்டிக்கான ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து
- இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
- இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 6) நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூரில் நடைபெறும் இந்தப் போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. ஒருநாள் போட்டியில் மீண்டும் ஜோரூட் களமிறங்குகிறார். கிட்டதட்ட 14 மாதங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ரூட் இடம் பிடித்துள்ளார். இவர் கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடினார்.
முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணி:-
பென் டக்கெட், பில் சால்ட் (கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாகிப் மஹ்மூத்.