search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 196 ரன்னில் சுருண்டது இலங்கை

    • கமிந்து மெண்டில் மட்டும் தாக்குப்பிடித்து 74 ரன்கள் சேர்த்தார்.
    • ஐந்து பேர் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் 29-ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜோ ரூட் (143), கஸ் அட்கின்சன் (118) ஆகியோரின் சதத்தால் நேற்றைய 2-வதுநாள் ஆட்டத்தின்போது 427 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது, இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. கமந்து மெண்டிஸ் மட்டும் தாக்குப்பிடித்து 74 ரன்கள் அடிக்க இலங்கை அணி 196 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ், ஒல்லி ஸ்டோன், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    231 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது. லாரன்ஸ் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் டக்கட் 15 ரன்னுடனும், ஒல்லி போப் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    Next Story
    ×