search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கவுதம் கம்பீர் சொன்னது இதுதான்... விவரிக்கும் அதிவேக பந்து வீச்சாளர் மயங்க் யாதவ்
    X

    கவுதம் கம்பீர் சொன்னது இதுதான்... விவரிக்கும் அதிவேக பந்து வீச்சாளர் மயங்க் யாதவ்

    • ஐ.பி.எல். தொடரில் 156.7 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஈர்த்தார்.
    • சர்வதேச போட்டியில் அறிமுகமாகி முதல் ஓவரை மெய்டனாக வீசினார்.

    இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் யாதவ் இடம் பிடித்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் 156.7 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் வியக்க வைத்தவர். காயம் காரணமாக தொடர்ந்து அவரால் ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியவில்லை.

    காயம் சரியான நிலையில், தற்போது 4 மாதம் கழித்து நேரடியாக வங்கதேசம் தொடரில் அறிமுகம் ஆனார். முதல் ஓவரை மெய்டனாக வீசி அசத்தினார். 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    இந்திய அணியில் அறிமுகம் ஆனது, தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கூறியது என்ன என்பது குறித்து அவர் விவரித்துள்ளார்.

    இது தொடர்பாக மயங்க் யாதவ் கூறியதாவது:-

    இந்திய அணியில் அறிமுகம் ஆனது தொடர்பாக நான் உண்மையிலேயே உற்சாகமாக இருந்தேன். ஆனால் சற்று பதட்டம் இருந்தது. காயத்திற்குப் பிறகு நான் திரும்பிய தொடர் இதுவாகும். நான் போட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை. பின்னர் நேரடியாக இந்திய அணியில் அறிமுகம் ஆனேன். இதனால் கொஞ்சம் பதட்டம் இருந்தது.

    காயத்தில் இருந்து மீண்டும் வருவதற்கான காலம் மிகவும் கடினமாக இருந்தது. கடந்த 4 மாதங்களில் ஏராளமான ஏற்றம் மற்றும் இறக்கம் இருந்தது. ஆனால், என்னைவிட, என்னோடு பணியாற்றியவர்களுக்கு கடினமான காலகமாக இருந்தது.

    இன்று (போட்டி நடைபெற்ற நேற்று) நான் என்னுடைய உடலில் கவனம் செலுத்தினேர். மேலும், வேகமாக பந்து வீசுவதை விட சரியான (துல்லியமான) லெந்தில் பந்து வீச தீர்மானித்தேன். என்னுடைய வேகம் குறித்து சிந்திக்கவில்லை. முடிந்த அளவு ரன் செல்வதை தடுத்து, சரியான லைன், லெந்தில் பந்து வீச முயற்சி செய்தேன்.

    தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தன்னிடம் கூடுதலாக எதையும் பற்றி சிந்திக்க வேண்டாம். உங்களுடைய அடிப்படையான விசயத்தில் உறுதியாக இருந்து அதை செய்யவும் என்றார். கடந்த காலத்தில் எனக்கு நேர்மறையான முடிவு தந்ததை செய்யவும் என்றார். வித்தியாசமான விசயத்தை யோசிக்க முயற்சிக்க வேண்டாம். இது சர்வதேச போட்டி என்று கூட நினைத்துக் கொள்ள வேண்டாம் என்றார். இதை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது.

    இவ்வாறு மயங்க் யாதவ் தெரிவித்தார்.

    Next Story
    ×