search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பிக்பாஷ் லீக் தொடர்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹோபர்ட் ஹரிகேன்ஸ்
    X

    பிக்பாஷ் லீக் தொடர்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹோபர்ட் ஹரிகேன்ஸ்

    • முதலில் ஆடிய ஹோபர்ட் அணி 20 ஓவரில் 173 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய சிட்னி சிக்சர்ஸ் 161 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின.

    இன்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் சிட்னி சிக்சர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. பென் மெக்டர்மார்ட் 42 ரன்னும், காலெப் ஜுவல் 40 ரன்னும், மிட்செல் ஒவன் 36 ரன்னும், டிம் டேவிட் 25 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து இறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜோர்டான் சில்க் அரை சதம் கடந்து 57 ரன்னில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குர்தீஸ் பாட்டர்சன் 48 ரன் எடுத்து அவுட்டானார். லச்சின் ஷா 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில் சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்த சிட்னி சிக்சர்ஸ் அணி 24-ம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் சிட்னி தண்டர் அல்லது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியுடன் மோதுகிறது.

    Next Story
    ×