என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
கிரிக்கெட் (Cricket)
![ஜனவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை வெல்வாரா வருண் சக்கரவர்த்தி? ஜனவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை வெல்வாரா வருண் சக்கரவர்த்தி?](https://media.maalaimalar.com/h-upload/2025/02/06/9017194-icc.webp)
ஜனவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை வெல்வாரா வருண் சக்கரவர்த்தி?
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐசிசி வழங்கி வருகிறது.
- ஜனவரி மாதத்திற்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி, வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன், பாகிஸ்தானின் நோமன் அலி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 14 விக்கெட் சாய்த்து வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன் விருது வென்றிருந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சுழலில் அசத்திய வாரிக்கன் 19 விக்கெட் கைப்பற்றினார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் சுழலில் அசத்திய நோமன் அலி 16 விக்கெட் வீழ்த்தினார்.
இதேபோல், சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் கொங்கடி திரிஷா, வெஸ்ட் இண்டீசின் கரிஷ்மா, ஆஸ்திரேலியாவின் பெத் மூனே ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
இதில் சமீபத்தில் முடிந்த 19 வயதுக்குட்பட்ட ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பையில் திரிஷா ஒரு சதம் உள்பட 309 ரன் குவித்தார். மேலும் பவுலிங்கில் 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.