search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ராவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ரபாடா
    X

    ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பும்ராவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ரபாடா

    • பேட்டிங் தரவரிசையில் ஜெய்ஸ்வால் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • ரச்சின் ரவீந்திரா 8 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் பந்து வீச்சாளர்களில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரபாடா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் மிகவும் வேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்தவர் வீரர் என்ற சாதனையையும் ரபாடா படைத்தார்.

    2018-ல் ரபாடா ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார். பின்னர் பின்னடைவை சந்தித்த ரபாடா மீண்டும் முதலிடம் பிடித்து மாஸ் காட்டியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தானின் நோமன் அலி டாப் 10-க்குள் நுழைந்துள்ளார்.

    3-வது மற்றும் 4-வது இடங்கள் முறையே பும்ரா, அஸ்வின் உள்ளனர்.மிட்செல் சான்ட்னர் 30 இடங்கள் முன்னேறி 44-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பாக சான்ட்னர் 2017-ம் ஆண்டு 39-வது இடத்தில் இருந்ததே அவரது உச்சபட்ச தரவரிசையாகும்.

    பேட்டிங் தரவரிசையில் ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீல் 20 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா 8 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

    Next Story
    ×