என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
மகளிர் டி20 உலகக் கோப்பை: இலங்கைக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
- மந்தனா, கவுர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர்.
- 50 ரன்னில் மந்தனா ரன் அவுட் முறையில் வெளியேறினார்.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் இன்று துபாயில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- மந்தனா களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தது.
அதிரடியாக விளையாடிய மந்தனா அரை சதம் விளாசி தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவர் அவுட் ஆன அடுத்த பந்தே ஷபாலி வர்மா 43 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்னில் அவுட் ஆனார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுர் 27 பந்தில் அரை சதம் விளாசினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது.