என் மலர்
கிரிக்கெட் (Cricket)
X
இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: இளம் வேகப்பந்து வீச்சாளர் விலகல்?
Byமாலை மலர்11 Jan 2025 4:14 PM IST
- இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
- இந்தியா- இங்கிலாந்து தொடர் ஜனவரி 22-ந் தேதி தொடங்கி பிபரவரி 12-ந் தேதி வரை நடக்கிறது.
இங்கிலாந்து அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் ஜனவரி 22-ந் தேதி தொடங்கி பிபரவரி 12-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் காயம் காரணமாக விலகி உள்ளார். காயம் காரணமாக அவர் இந்த தொடரில் பங்கேற்பது சந்தேகம் என தெரிய வந்துள்ளது.
Next Story
×
X